internet

img

இன்ஸ்டாகிராமில் ஸ்மிருதி இராணி பதிவிட்ட புகைப்படம் - நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்ஸ்டாகிராமில் முட்டை ஃப்ரைட்ரைஸ் புகைப்படத்தை பதிவிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2018-ஆம் தி வயர் செய்தி நிறுவனத்தில் வெளியான சிறப்புக் கட்டுரையில், ‘பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் கோபால் பார்கவா, ”குழந்தைகள் முட்டைகள் சாப்பிட்டால் அவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக வளருவார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 

இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டையையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் முட்டை ஃப்ரைட்ரைஸ் செய்முறை விளக்கத்துடன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.  அதற்கு, நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்மிருதி இராணியின் இந்த பதிவுக்கு, ”பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஏன் முட்டை வழங்கப்படுவதில்லை” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார், ”பாஜக ஆளும் மாநிலங்களில், ஏழைகள் முட்டை சாப்பிடுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, தனிப்பட்ட லாபங்களுக்காக போலி கதைகளால் பொதுமக்களை எவ்வாறு முட்டாளாக்குவது என்பது பாஜக குழுவுக்கு நன்கு தெரியும்” என்றும் மற்றொருவர் கூறியுள்ளார்.
 

;